ADDED : அக் 08, 2026 03:25 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அடுத்துள்ள கொல்லிமலையில்,
வெடிமருந்து பதுக்கி வைத்திருப்பதாக, செங்கரை போலீசாருக்கு தகவல்
கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், தீவிர ரோந்தில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,
கொல்லிமலை, திருப்புலி நாடு பஞ்., வால்குழிபட்டியை சேர்ந்த தருமன்
மகன் பழனிசாமி, 50, என்பவரது வீட்டில் வெடிமருந்து பதுக்கி
வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது
செய்த போலீசார், எலக்ட்ரிக் டெட்டனேட்டர், 5, வெடி மருந்து குச்சிகள்,
26, உள்பட மொத்தம், மூன்று கிலோ எடையுள்ள வெடி மருந்துகள்
கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.
