/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் ஒழிப்பு மருத்துவர்கள் உறுதிமொழி
/
போதைப்பொருள் ஒழிப்பு மருத்துவர்கள் உறுதிமொழி
ADDED : ஜூன் 27, 2025 01:23 AM
சேலம், சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி, சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று, மருத்துவ கல்லுாரியின் மனநலத்துறை சார்பில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. டீன் தேவி மீனாள் தலைமை வகித்தார். அதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், போதைப்பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து, போதைப்பொருள் உபயோகத்தால் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து தற்காத்துக்கொள்வது குறித்து, மாணவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், மனநலத்துறை தலைவர் ரவிசங்கர், இணை பேராசிரியர் முகமது இலியாஸ், உதவி பேராசிரியர்கள், ஆர்.எம்.ஓ., ஸ்ரீலதா உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் சேலம் மாநகர போலீசார் சார்பில், கோட்டை மைதானத்தில், 'போதை பொருட்கள் பயன்பாடு வேண்டாம்' என, பொம்மை நாடகம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விளையாட்டு போட்டி
வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில், அங்குள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 'போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்' என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, பேச்சு, நாடகம், ஓட்டம், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராஜ்குமார்(பொ), எஸ்.ஐ., வெங்கடாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.