/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
/
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
ADDED : டிச 10, 2025 10:35 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுா-ரியில், போதைப்பொருள் தடுப்புக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு மனநலம், மது போதை ஒழிப்பு குறித்த விழிப்பு-ணர்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் சரவணா-தேவி தலைமை வகித்தார்.
இதில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நாமக்கல் மாவட்ட வள பயிற்றுநர் டேவிட் ராஜா, மனநலம், மனநோய், மனநல கோளாறுகள், தீவிர மனநல கோளாறுகள், தற்-கொலை தடுப்பு, போதைப்பொருள் பயன்பாடு, அறிவுசார் இயலாமை, குழந்தை பருவ கோளா-றுகள், மறதி நோய், மனநல சுவாச பாதிப்பு மற்றும் ஆலோசனை திறன்கள் குறித்து விழிப்பு-ணர்வை ஏற்படுத்தினார். மேலும், போதை பழக்-கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சத்யா, சுகுணா, வட்டார இயக்க மேலாளர் அமுதா, வட்டார வள பயிற்றுநர் கற்பகம், ஒருங்கி-ணைப்பாளர் ரமேஷ் குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

