/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை பொருள் தடுப்பு குறித்த பயிற்சி முகாம்
/
போதை பொருள் தடுப்பு குறித்த பயிற்சி முகாம்
ADDED : டிச 12, 2025 05:17 AM

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கல்லுாரி அளவில், யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கான, தற்கொலை தடுப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டரங்கில் பயிற்சி நடந்தது. மாணவ, மாணவியரிடையே தற்கொலை எண்ணத்தை தவிர்க்கவும், போதை பொருள் பயன்பாட்டை தவிர்க்கவும் ஆலோசனை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை கலெக்டர் துர்கா முர்த்தி துவக்கி வைத்தார்.மாவட்டத்திலுள்ள, 30 கல்லுாரிகளின் யூத் ரெட்கிராஸ் திட்ட அலுவலர்களுக்கு இப் பயிற்சி வழங்கப்பட்டது. ரெட்கிராஸ் செயலர் ராஜேஸ் கண்ணன், துணைத்தலைவர் நாகராஜன், பொருளாளர் அந்தோணி ஜெனிட், ஒய்.ஆர்.சி., மாவட்ட ஓருங்கிணைப்பாளர் வெஸ்லி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

