/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
/
வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
ADDED : டிச 12, 2025 05:16 AM

நாமக்கல்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, வருவாய்த்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில், வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்திடக்கோரி, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுக்கப்பட்டது. அந்த வகையில், நாமக்கல் மாவட்ட தமிழ் மாநில வருவாய் துறை அலுவலர் சங்க தலைவர் சரவணகுமார் மற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் 2 நேரடி நியமன அலுவலர் சங்க தலைவர் சரவணன் ஆகியோர் தலைமையில், நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதில், 106 பேர் பங்கேற்றனர். அதனால் சில அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்கள் இல்லாத நிலை காணப்பட்டது.