/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் போதை மறுவாழ்வு மையம் தேவை
/
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் போதை மறுவாழ்வு மையம் தேவை
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் போதை மறுவாழ்வு மையம் தேவை
பள்ளிப்பாளையம் ஜி.ஹெச்.,ல் போதை மறுவாழ்வு மையம் தேவை
ADDED : ஜூன் 26, 2025 01:35 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் மது விற்பனை இரவு, பகலாக ஜோராக நடந்து வருகிறது. இதனால் ஏழை மக்கள், மது பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.
அவர்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்டு நல்வழிபடுத்தும் வகையில், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க வேண்டும். இதனால், மது, புகையிலை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சிகிசசை பெற வாய்ப்புள்ளது.
மேலும், உளவியல் ஆலோசகர் மூலம் சிகிச்சை அளித்தால், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எளிதில் மீண்டுவரும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.