/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பாட்டியை கத்தியால் குத்திக்கொன்ற 'போதை' பேரன் தற்கொலை முயற்சி
/
பாட்டியை கத்தியால் குத்திக்கொன்ற 'போதை' பேரன் தற்கொலை முயற்சி
பாட்டியை கத்தியால் குத்திக்கொன்ற 'போதை' பேரன் தற்கொலை முயற்சி
பாட்டியை கத்தியால் குத்திக்கொன்ற 'போதை' பேரன் தற்கொலை முயற்சி
ADDED : ஏப் 22, 2025 06:46 AM
ப.வேலுார் : வேலகவுண்டம்பட்டி அருகே, மது போதையில், பாட்டியை கத்தியால் குத்திக்கொன்ற, 16 வயது பேரன், போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றார்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே, கொண்டாங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர், 70 வயது மூதாட்டி. இவர், தன் தோட்டத்தில் மகன் மற்றும் பேரனுடன் வசித்து வந்தார்.
சிறுவன், பிளஸ் 1 படித்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அவர், பாட்டி வைத்திருந்த உண்டியலை உடைத்து, பணத்தை திருடி, மது குடித்துள்ளார். அதனை தன் மகனிடம், மூதாட்டி தெரிவித்தார்.
அன்று இரவும் மது போதையில் வந்த சிறுவனை, அவரது தந்தை அடித்து விரட்டினார். இதையடுத்து, இரவு, மீண்டும் மது குடித்துவிட்டு வந்த சிறுவன், வீட்டிற்கு வெளியே, கட்டிலில் துாங்கிக்கொண்டிருந்த பாட்டியை, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
ரத்த வெள்ளத்தில், இறந்து கிடந்த மூதாட்டி உடலை பார்த்த அவரது மகன், போலீசாருக்கு தெரிவிக்காமல், உடலை அடக்கம் செய்ய முயன்றார்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார், மூதாட்டி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், பயந்த சிறுவன், மதுவில் விஷம் கலந்து குடித்தார். அவரை போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.