/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பொருளியல் பாடம் எளிதாக புரிய 'அனிமேஷன்' வடிவில் உருவாக்கம்
/
பொருளியல் பாடம் எளிதாக புரிய 'அனிமேஷன்' வடிவில் உருவாக்கம்
பொருளியல் பாடம் எளிதாக புரிய 'அனிமேஷன்' வடிவில் உருவாக்கம்
பொருளியல் பாடம் எளிதாக புரிய 'அனிமேஷன்' வடிவில் உருவாக்கம்
ADDED : நவ 13, 2025 03:21 AM
நாமக்கல்: பிளஸ் 2 மாணவர்கள், பொருளியல் பாடத்தை எளிதாக புரிந்து-கொள்ளும் வகையில், 'அனிமேஷன்' வடிவில் பாடங்களை, அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கி அசத்தி உள்ளார்.
தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்கள், கல்வியில் சிறந்த விளங்-கவும், கற்றலில் மேம்பாடு அடையவும், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறவும், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆர்.புதுப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளி முதுநிலை பொருளியல் ஆசிரியர் சக்திவேல், பொருளாதார பாடங்களை, 'அனிமேஷன்' வீடியோ வடிவங்க-ளாக வடிவமைத்து உருவாக்கி உள்ளார்.
மெல்ல கற்கும் மாணவர்களை மட்டுமல்லாமல், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், கற்றல் ஆர்வத்தை துாண்டி கவ-னத்தை ஈர்த்து, கல்வியில் நாட்டத்தை ஏற்படுத்தும். இந்த, 'அனி-மேஷன்' வடிவிலான புதிய முயற்சி மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ காணொளி வடிவ பாடங்களை, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, நேற்று துவக்கி வைத்து, மாணவர்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டார். மேலும், சிறப்-பான பணியை மேற்கொண்ட சக்திவேலுக்கு பாராட்டுகளை தெரி-வித்தார்.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் அருள்தாஸ், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் அப்துல்வகாப், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொருளாதார ஆசிரியர் ஜெகதீசன், ஆசிரி-யர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

