/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ரிக் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடி தம்பதியர் மீது ரிக் உரிமையாளர்கள் புகார்
/
ரிக் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடி தம்பதியர் மீது ரிக் உரிமையாளர்கள் புகார்
ரிக் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடி தம்பதியர் மீது ரிக் உரிமையாளர்கள் புகார்
ரிக் வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக பண மோசடி தம்பதியர் மீது ரிக் உரிமையாளர்கள் புகார்
ADDED : நவ 13, 2025 03:22 AM
நாமக்கல்: ரிக் வண்டியில் பணி புரிய தேவையான ஆட்களை அனுப்புவ-தாக கூறி, 50, லட்சம் ரூபாய் முன் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, தம்பதியர் மீது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர், நாமக்கல் எஸ்.பி.,யிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்டம், திருச்-செங்கோட்டை சேர்ந்த கணவன், மனைவி இருவரும், தன்னிடம் ரிக் வண்டிக்கு தேவையான ஆட்கள் உள்ளனர். தேவைப்படும்-போது ஆட்களை அனுப்புவதாக கூறி, ரிக் வண்டி உரிமையாளர்-களிடம் பணம் பெற்றுக்கொண்டு, ஆட்களை அனுப்புவதில்லை.கொடுத்த பணத்தை திரும்ப கேட்டால், அலைக்கழிப்பு செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். தொடர்ந்து வற்புறுத்-தினால், உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவேன் என, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். சங்கத்தின் லோகோவை தவறாக பயன்படுத்தி, ரிக் உரிமையாளர்களிடம் பணம் பறித்துள்ளனர். இவர்கள் மீது, கர்நாடகா, ஆந்திரா மாநி-லங்களிலும் புகாரளித்துள்ளனர். எங்கள் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்-டுள்ளது.
திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுரேஷ் கூறி-யதாவது:
நாங்கள், திருச்செங்கோட்டில் தொழில் செய்வதே கடினமான சூழ்நிலையாக உள்ளது. அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பெற்றுத்தருகிறோம் எனக்கூறி, தம்பதியர் இருவரும், 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். இதனால், பல ரிக் உரிமையாளர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்-கின்றனர்.
ஒவ்வொருவரும், நான்கு முதல், ஐந்து லட்சம் ரூபாய் முன்-பணம் பெற்றுள்ளனர். வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி, பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில், திருச்செங்கோட்டில் மட்டும், 300 கோடி ரூபாய் வரை இழந்துள்-ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

