/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்வி சந்திப்பு தான் எதிர்கால தலைமுறையை வழிநடத்தும் அடித்தளம்: எம்.ஐ.டி., பேராசிரியர்
/
கல்வி சந்திப்பு தான் எதிர்கால தலைமுறையை வழிநடத்தும் அடித்தளம்: எம்.ஐ.டி., பேராசிரியர்
கல்வி சந்திப்பு தான் எதிர்கால தலைமுறையை வழிநடத்தும் அடித்தளம்: எம்.ஐ.டி., பேராசிரியர்
கல்வி சந்திப்பு தான் எதிர்கால தலைமுறையை வழிநடத்தும் அடித்தளம்: எம்.ஐ.டி., பேராசிரியர்
ADDED : செப் 30, 2025 01:42 AM
நாமக்கல் :''கல்வி சந்திப்புகள் தான் எதிர்கால தலைமுறையை வழிநடத்தும் அடித்தளமாக இருக்கும்,'' என, மாநாட்டில், சென்னை எம்.ஐ.டி., பேராசிரியர் விஜயபாஸ்கர் பேசினார்.
தமிழக பொருளாதார சங்கத்தின், 45வது ஆண்டு மாநாடு, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் மாதவி தலைமை வகித்தார். ஏ.இ.டி., அமைப்பின் தலைவர் லியேனார்ட், இணை தலைவர் பால்ராஜ், பொருளாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, மத்திய மாநில நிதி உறவுகள், நிலைத்த அபிவிருத்திக் குறிக்கோள்கள், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை மையமாக கொண்ட பிராந்திய பொருளாதார சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
சென்னை, எம்.ஐ.டி., பேராசிரியர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: சமூகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் இடையிலான உறவுகளை ஆராய்வதில், தமிழக அரசு தொடர்ந்து முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மாநில திட்ட ஆணையம், வளர்ச்சியின் திசையையும், தரத்தையும் வடிவமைக்கும் முக்கிய கடமையை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, நிலையான முன்னேற்றம், சமூக நலன் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த நிலையில் செயல்பட வேண்டும். வளர்ச்சியின் பலன்கள் எல்லா சமூகத்தினருக்கும் சமமாக சென்றடைய வேண்டும் என்பதே அரசின் கொள்கை. அறிவியல் ஆய்வுகள், தரவின் அடிப்படையிலான பகுப்பாய்வுகள் மற்றும் ஆராய்ச்சியின் வழிகாட்டுதலால் மட்டுமே நல்ல கொள்கை முடிவுகளை எடுக்க முடியும். இதற்காக, எம்.ஐ.டி., போன்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய கல்வி சந்திப்புகள் தான் எதிர்கால தலைமுறையை வழிநடத்தும் அடித்தளமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.