ADDED : ஜூன் 21, 2024 07:12 AM
நாமக்கல் : நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை, 5 காசுகள் உயர்ந்து, 515 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு, 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும், 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் முட்டை விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல், 515 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை விபரம் (காசு): சென்னை, 560, பர்வாலா, 466, பெங்களூரு, 555, டில்லி, 480, ஹைதராபாத், 505, மும்பை, 575, மைசூரு, 557, விஜயவாடா 500, ஹொஸ்பேட், 510, கோல்கட்டா, 530. பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ, 133 ரூபாய், முட்டைக்கோழி ஒரு கிலோ, 87 ரூபாயாக உள்ளது.