ADDED : ஆக 03, 2026 05:54 AM
நாமக்கல்:நாமக்கல்
மண்டலத்தில், 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 8
கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
அவற்றின் மூலம், 7 கோடி
முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முட்டை விலையை, 'நெக்'
நிர்ணயம் செய்கிறது. இந்தாண்டு ஜூன் துவக்கத்தில், 570 காசாக முட்டை
விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இது படிப்படியாக உயர்ந்து,
ஜூலை, 18ல், முட்டை வரலாற்றிலேயே உச்சபட்ச விலையாக,ல 680 காசாக
நிர்ணயம் செயயப்பட்டது.கடந்த, 24ல், 30 காசு குறைக்கப்பட்டு, 650
காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, 26ல், 20 காசு, 27ல்,
30 காசு, 31ல், 30 காசு சரிந்து, 570 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
நேற்று நடந்த கூட்டத்தில், மேலும், 30 காசு குறைக்கப்பட்டு, 540 காசாக
நிர்ணயம் செய்யப்பட்டது. நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை
(காசுகளில்) நிலவரம்:
சென்னை, 620, ஐதராபாத், 530, விஜயவாடா, 550,
பர்வாலா, 495, மும்பை, 600, மைசூரு, 620, பெங்களூரு, 620, கோல்கட்டா,
610, டில்லி, 530 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல்,
நாமக்கல்லில் நேற்று நடந்த பண்ணையாளர், வியாபாரிகள்
ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ஒரு கிலோ, முட்டைக்கோழி, 102
ரூபாய், பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக்குழு
கூட்டத்தில், ஒரு கிலோ கறிக்கோழி, 110 ரூபாய் என, விலை நிர்ணயம்
செய்யப்பட்டது.
