ADDED : ஆக 03, 2026 05:54 AM
வெண்ணந்துார்:அத்தனுார்
அருகே, ஆயிபாளையம் ஆராங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன்.
இவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில், பாம்பேறி
சிதிலமடைந்ததால் அதை சீரமைக்கும் பணி, நடந்தது.
இப்பணியில், அத்தனுார் ஆயிபாளையம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன்
தங்கவேலு, 58, மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது,
எதிர்பாராத விதமாக தங்கவேலு கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவர்
மேலே வராததால் ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாலை, 4:00 மணி முதல் தீயணைப்பு
வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நவீன கேமரா உதவியுடன் தேடியும்
அவர் கிடைக்கவில்லை. பின், கிணற்றிலிருந்த தண்ணீரை மின் மோட்டார்
மூலம் வெளியேற்றியபோது, 70 அடி ஆழமுள்ள கிணற்றில், 10 அடி ஆழத்தில்
உள்ள பாறை இடுக்கில் சிக்கி தங்கவேலு உயிரிழந்த நிலையில் இருப்பது
தெரியவந்தது. 15 மணி நேர போராட்டத்திற்கு பின், நேற்று காலை, 6:00
மணிக்கு அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். வெண்ணந்துார்
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
