ADDED : நவ 26, 2024 06:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், 560 காசுக்கு விற்ற முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 565 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த, 22ல், 550 காசாக இருந்த நிலையில், 23ல், 555, 24ல், 560, 25ல், 565 காசுகள் என, தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) நில-வரம்: சென்னை, 600, ஐதராபாத், 580, விஜயவாடா, 595, பர்-வாலா, 617, மும்பை, 650, மைசூரு, 607, பெங்களூரு, 605, கோல்-கட்டா, 645, டில்லி, 650 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முட்டைக்கோழி விலை கிலோ, 97 ரூபாய், கறிக்கோழி விலை கிலோ, 77 ரூபாய் என, பழைய விலையே நிர்ணயம் செய்யப்பட்-டது.