/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகம்
/
முட்டை விலை தொடர்ந்து ஏறுமுகம்
ADDED : நவ 19, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை கொள்முதல் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவான 'நெக்' நிர்ணயம் செய்கிறது.
கடந்த, 16ல், ஐந்து காசு அதிகரித்து, 600 காசாக முட்டை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவே, முட்டை வரலாற்றில் உச்சபட்ச விலையாக இருந்தது.
இந்நிலையில், நேற்று, 'நெக்' மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், முட்டை கொள்முதல் விலையை, மேலும், 5 காசு உயர்த்தி, முட்டை வரலாற்றில் முதன் முறையாக, 605 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதால், பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

