/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரத்து உயர்ந்ததால் கத்திரிக்காய் விலை சரிவு
/
வரத்து உயர்ந்ததால் கத்திரிக்காய் விலை சரிவு
ADDED : ஜூன் 16, 2025 07:32 AM
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில், நேற்று ஒரே நாளில், 28,575 கிலோ காய்கறி, 10,190 கிலோ பழங்கள், 480 கிலோ பூக்கள் என மொத்தம், 39,245 கிலோ காய்கறி, பழங்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 16.6 லட்சம் ரூபாயாகும்.
ராசிபுரம் உழவர் சந்தையில் கடந்த வாரம், ஒரு கிலோ, 50 ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய், நேற்று, 12 ரூபாய் குறைந்து, 38 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட வரத்து உயர்ந்ததால் விலை குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். கடந்த வாரம், 400 கிலோ மட்டுமே கத்திரிக்காய் விற்பனைக்கு வந்திருந்தது. ஆனால், நேற்று, 680 கிலோ கத்திரிக்காய் விற்பனைக்கு வந்திருந்தது. இதுனால், விலை குறைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.