/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிறுமியை சீண்டிய முதியவர் 4 மாதங்களுக்கு பின் சிக்கினார்
/
சிறுமியை சீண்டிய முதியவர் 4 மாதங்களுக்கு பின் சிக்கினார்
சிறுமியை சீண்டிய முதியவர் 4 மாதங்களுக்கு பின் சிக்கினார்
சிறுமியை சீண்டிய முதியவர் 4 மாதங்களுக்கு பின் சிக்கினார்
ADDED : நவ 07, 2025 01:04 AM
ஆத்துார், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர், 15 வயது சிறுமி. இவர், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி, 10ம் வகுப்பு படிக்கிறார். விடுமுறை நாட்களில், ஆடுகளை, ஏரிப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வார்.
அதன்படி கடந்த ஜூனில், ஆடுகளை மேய்த்தபோது, அங்கு வந்த, சாத்தப்பாடியை சேர்ந்த பெரியசாமி, 67, என்பவர், மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். தொடர்ந்து மிரட்டல் விடுத்து, மாணவியை தொந்தரவு செய்துள்ளார். பின் முதியவரின், 16 வயது பேரனும், மாணவியிடம் தொந்தரவு செய்துள்ளார்.
பேரனுக்கு வலை
இதுகுறித்து மாணவி, பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவிக்க, அவர்கள், சேலம் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் அளித்தனர். பின், ஆத்துார் மகளிர் போலீசார் விசாரித்து, பெரியசாமி, அவரது பேரன் மீது, 'போக்சோ' வழக்குப்பதிந்தனர். 4 மாதங்களாக, தலைமறைவாக இருந்த பெரியசாமி, நேற்று, சாத்தாப்பாடிக்கு வந்தபோது, போலீசார் கைது செய்து, 16 வயது சிறுவனை தேடுகின்றனர்.

