/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலர் மோதி மூதாட்டி உயிரிழப்பு ஆக்கிரமிப்பால் தொடரும் அவலம்
/
டூவீலர் மோதி மூதாட்டி உயிரிழப்பு ஆக்கிரமிப்பால் தொடரும் அவலம்
டூவீலர் மோதி மூதாட்டி உயிரிழப்பு ஆக்கிரமிப்பால் தொடரும் அவலம்
டூவீலர் மோதி மூதாட்டி உயிரிழப்பு ஆக்கிரமிப்பால் தொடரும் அவலம்
ADDED : ஜூன் 21, 2025 01:09 AM
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, காவேரி நகரை சேர்ந்தவர் லட்சுமி, 75; கணவர் இறந்துவிட்டார். இவர், குமாரபாளையம் நகராட்சி பூங்காவில், தற்காலிக துாய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, 4:50 மணிக்கு, டீ குடித்துவிட்டு வருவதற்காக, நகராட்சி பூங்காவை விட்டு வெளியே சென்றார்.
அப்போது, புளியம்பட்டி பகுதியில் இருந்து வேகமாக வந்த டூவீலர், கட்டுப்பாட்டை இழந்து மூதாட்டி மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். டூவீலரில் வந்த, குமாரபாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டியை சேர்ந்த கதிர், 20, மணிகண்டன், 19, ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டதே, மூதாட்டி உயிரிழப்புக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, குமாரபாளையம் - இடைப்பாடி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மனித உயிர்களை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.