/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாலை நடுவே மின் கம்பம்; போக்குவரத்துக்கு சிரமம்
/
சாலை நடுவே மின் கம்பம்; போக்குவரத்துக்கு சிரமம்
ADDED : ஆக 12, 2024 07:00 AM
நாமக்கல்: சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி கிராமம், ஆதிதிராவிடர் தெருவில் மின் கம்பம் ஒன்று பஞ்., சாலை நடுவே உள்ளது.
இதனால் அப்பகுதியில் வண்டி, வாகனங்கள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்களை, அப்பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், அந்த மின் கம்பத்தை தாங்கி நிற்கும் இணைப்பு கம்பியும், முறையாக இல்லாததால் சிறுவர்கள் விளையாடும் போது மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததையடுத்து, கடந்த மார்ச் மாதம், கரூர் மாவட்ட மின்சார அதிகாரிகள், பேளுக்குறிச்சி கிராம மின்சார உதவி பொறியாளர் மற்றும் பேளுக்குறிச்சி பஞ்சாயத்து அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது, சாலை நடுவே உள்ள கம்பத்தை ஓரமாக மாற்றி அமைத்து தருகிறோம் என, உறுதியளித்து சென்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போக்குவரத்து இடையூறு மற்றும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கு ஆபத்தாக உள்ள இந்த கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

