/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பம்: இடமாற்ற கோரிக்கை
/
போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பம்: இடமாற்ற கோரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பம்: இடமாற்ற கோரிக்கை
போக்குவரத்துக்கு இடையூறான மின் கம்பம்: இடமாற்ற கோரிக்கை
ADDED : நவ 23, 2025 01:30 AM
பள்ளிப்பாளையம், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பத்தை, இடம் மாற்றி அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள ஆர்.எஸ்., சாலை வழியாக தினமும் பஸ், லாரி, கார், சரக்கு வாகனம், டூவீலர் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், ஆர்.எஸ்., சாலை முக்கிய வழித்தடமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக செல்லும், தேவாங்கபுரம் என்ற இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலை நடுவே மின் கம்பம் உள்ளது.
இரவில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கவனக்குறைவாக வந்தால் கம்பத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, முதியோர்கள் கடும் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே இந்த சாலை குறுகியதாக காணப்படுகிறது. இதில் இடையூறாக மின்கம்பம் உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் கம்பத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

