/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் 20 இ.வி., ஸ்டேஷன் மின்வாரிய தலைவர் தகவல்
/
நாமக்கல்லில் 20 இ.வி., ஸ்டேஷன் மின்வாரிய தலைவர் தகவல்
நாமக்கல்லில் 20 இ.வி., ஸ்டேஷன் மின்வாரிய தலைவர் தகவல்
நாமக்கல்லில் 20 இ.வி., ஸ்டேஷன் மின்வாரிய தலைவர் தகவல்
ADDED : நவ 23, 2025 01:02 AM
நாமக்கல், ''இ.வி., ஸ்டேஷனை பொறுத்தவரை, தமிழகம் முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது,'' என, தமிழக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாடு மின் வாரிய மேலாண் இயக்குனரும், தலைவருமான ராதாகிருஷ்ணன், நாமக்கல் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மற்றும் துணை மின் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் கோவில்களில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல்லை பொறுத்தவரை, அதிகளவில் எலக்ட்ரானிக் வாகனங்கள் வரப்போகிறது. வருங்கால தேவையை கருத்தில் கொண்டு, பெட்ரோல் பங்க்குகள், போக்குவரத்து கழக பணிமனைகள், தனியார் இடங்களில், இ.வி., சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பா, 850 கே.வி., டிரான்ஸ்பார்மர் தேவை என்று தெரிவித்துள்ளனர்.
பொதுவாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இ.வி., ஸ்டேஷனை பொறுத்தவரை, தமிழகம் முழுவதும், 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில், 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

