/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2025 01:37 AM
நாமக்கல், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். சங்க கவுரவ தலைவர் முருகேசன், துணை செயலாளர் கண்ணன், கிளை பொருளாளர் அழகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
அதில், தமிழகத்தில் உள்ள, 3.25 கோடி வீடுகளுக்கான மின் இணைப்புகளில், 22 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகளும், சிறு, குறு தொழில்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மின்சார சட்ட திருத்த மசோதா மூலம் மின்வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளைஞர்களுக்கு வேலையிழப்பு, மின் கட்டண உயர்வு, ஸ்மார்ட் மீட்டர் திட்டம் போன்றவற்றை கைவிட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.