/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 20, 2025 01:14 AM
நாமக்கல், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள, 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாமக்கல், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.,) சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திட்ட செயலாளர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். அதில், மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 40 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு மின்வாரியம் நேரடியாக கூலி வழங்க வேண்டும். மின் நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். விடுபட்ட பகுதி நேர பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
கவுரவ தலைவர் முருகேசன், திட்ட செயலாளர் திருமூர்த்தி, பொருளாளர் அழகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.