தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 16, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்:சேந்தமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சேந்தமங்கலம் கிளை சார்பில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கட்டாய ஆசிரியர் தகுதி தேர்வை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தல், கல்வி உரிமை சட்டம்-2017ல் உரிய திருத்தம் பார்லிமென்டில் கொண்டு வருதல், முழுக்கல்வி தகுதியோடு பணியமர்த்தப்பட்டுள்ள, தமிழ்நாடு ஆசிரியர்கள் கண்ணியம் காத்திடும் வகையில், தனிச் சட்டம் தமிழக சட்டசபையில் இயற்றுதல், ஜூலை, 7ல் வெளியிட்ட அறிக்கையை டி.ஆர்.பி., திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வட்டார தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். வட்டார துணை தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சாந்தி, கோரிக்கை விளக்க பேசினார். மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் நிர்மலா ஆகியோர் கலந்துகொண்டனர். நிறைவாக வட்டார பொருளாளர் சுதாகர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us