/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் சேர தகுதியான விண்ணப்பம் வரவேற்பு
/
விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் சேர தகுதியான விண்ணப்பம் வரவேற்பு
விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் சேர தகுதியான விண்ணப்பம் வரவேற்பு
விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் சேர தகுதியான விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 10, 2025 12:48 AM
நாமக்கல், 'இந்திய விமான படையில், அக்னிவீரர் திட்டத்தில் திட்ட ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் இருந்து இந்திய விமானப்படைக்கு 'அக்னி வீரர்' ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுக்கு, ஆள்சேர்ப்பு முகாம், தாம்பரம் விமானப்படை நிலையத்தில், வரும், செப்., 2ல் தொடங்குகிறது.
செப்., 2 முதல், ஆண்களுக்கும், செப்., 5 முதல் பெண்களுக்கும் நடக்கிறது. 50 சதவீதம் மதிப்பெண்களுடன் பிளஸ் 2 அல்லது அதற்கு சமமான கல்வியில் ஏதேனும் ஒரு பிரிவு தேர்ச்சி மற்றும் ஆங்கிலத்தில், 50 சதவீதம் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2026ம் ஆண்டு, ஜன., 1-ல், பதினேழரை வயதுக்கு மேல், 21 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் செப்., 2 முதல், 5 வரை நடக்கும் ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
தகுதியுள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது, 04286-222260 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.