/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
/
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 04, 2025 01:24 AM
நாமக்கல், ஜன. 4-
நாமக்கல் செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியில், 'டாஸ்லிங் டட்ஸ் கிளப்' சார்பில் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. செல்வம் குழும தலைவரும், நிர்வாக இயக்குனருமான செல்வராஜ், அறங்காவலர் ஜெயம் செல்வராஜ், செயலாளர் கவித்ரா நந்தினி, செல்வம் தொழில்நுட்ப கல்லுாரியின் செயல் இயக்குனர் கார்த்திக், கல்லுாரி முதல்வர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, கேக் வெட்டி அனைத்து அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு துறை தலைவர்கள்,  ஒருங்கிணைப்பாளர்கள்,    ஐ.எஸ்.டி.டி.பி., பயிற்சியாளர்கள், ஐ.ஓ.சி., உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.