ADDED : பிப் 03, 2025 08:37 AM
குமாரபாளையம்: நாமக்கல் தேசிய பசுமைப்படை, மத்திய, மாநில அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால-நிலை மாற்றத்துறை, கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனம் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கொல்லி-மலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்-பினர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.
இதில், உழவர் சந்தை, பஸ் ஸ்டாண்ட், ராஜம் தியேட்டர், ஆனங்கூர் பிரிவு, பள்ளிப்பாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட இடங்களில் விழிப்பு-ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
லா தொண்டு நிறுவனம் சார்பில் நாடகம், கிரா-மப்புற நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம் உள்-ளிட்ட நிகழ்ச்சி மூலம், ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்ப-டுத்த வேண்டாம்; தமிழக அரசின்,'மீண்டும் மஞ்-சப்பை' பயன்படுத்த வேணடும் என, விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, பொது மக்க-ளுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

