/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இ.பி.எஸ்., பிறந்த நாள் கட்சியினர் கொண்டாட்டம்
/
இ.பி.எஸ்., பிறந்த நாள் கட்சியினர் கொண்டாட்டம்
ADDED : மே 13, 2025 02:31 AM
நாமக்கல் தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச்செயலாளருமான இ.பி.எஸ்., 71வது பிறந்த நாளை, அக்கட்சியினர், மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.
நாமக்கல் மாநகர அ.தி.மு.க., சார்பில், நீர்மோர் பந்தல் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், தர்பூசணி, வெள்ளரி வழங்கப்பட்டது. தொடர்ந்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு அபிஷேகம், முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டது.
அதையடுத்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாநகர செயலாளருமான பாஸ்கர் தலைமை வகித்தார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றிய செயலாளர்கள் சேகர், செல்வகுமார், கோபிநாத், ரவிச்சந்திரன், மோகனுார் டவுன் பஞ்., செயலாளர் ராஜவடிவேல், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.