/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பராமரிப்பின்றி வீணாகும் சமத்துவபுரம் பூங்கா
/
பராமரிப்பின்றி வீணாகும் சமத்துவபுரம் பூங்கா
ADDED : பிப் 16, 2025 03:48 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் அருகே, அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆட்டையாம்பட்டி பிரிவு சாலை அருகே சமத்துவபுரம் அமைந்துள்ளது.
அப்பகு-தியில் குழந்தைகள் விளையாட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. இதில், குழந்தைகள் விளையாடி வந்தனர். நாட்கள் கடந்த நிலையில், பராமரிப்பின்றி பூங்காவில் முட்புதர் மண்டி காணப்ப-டுகிறது.இதனால், விளையாட்டு உபகரணங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் துருப்பிடித்து காணப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்-வாகம் அத்தனுார் டவுன் பஞ்.,க்குட்பட்ட சமத்துவபுரம் பகு-தியில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.