/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எக்ஸல் வணிகவியல் கல்லூரி பிரிஷ்மா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
/
எக்ஸல் வணிகவியல் கல்லூரி பிரிஷ்மா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
எக்ஸல் வணிகவியல் கல்லூரி பிரிஷ்மா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
எக்ஸல் வணிகவியல் கல்லூரி பிரிஷ்மா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ADDED : பிப் 23, 2024 01:41 AM
குமாரபாளையம்:குமாரபாளையம் எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லுாரியின், துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை, நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனமான திருப்பூர் பிரிஸ்மாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், கல்லுாரி முதல்வர் விமல் நிஷாந், துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறைத்தலைவர் கிறிஸ்டி ஜெனிபர், பிரிஸ்மா நிறுவன பொது மேலாளர் கண்ணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
மாணவர்கள் தங்கள் தனித்திறன்களை வளர்த்தல், மாணவர்களுக்கு துறை சார்ந்த பயிற்சி அளித்து ஆராய்ச்சி படிப்புகளை ஊக்குவித்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல், தொழில் நிறுவனங்களின் வழியே துறை சார்ந்த நேரடி பயிற்சி வழங்குதல் மற்றும் மாணவர்கள் படிப்பு சார்ந்த கள ஆய்வுகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு, இந்த ஒப்பந்தம் பயனுள்ளதாக அமையும். நிகழ்ச்சியில், எக்ஸல் வணிகவயில் மற்றும் அறிவியல் கல்லுாரியின் துகிலியல் மற்றும் ஆடை வடிவமைப்பு துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.