/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தேசிய அளவிலான கருத்தரங்கம், போட்டி எக்ஸல் கல்லுாரி 2ம் இடம் பிடித்து சாதனை
/
தேசிய அளவிலான கருத்தரங்கம், போட்டி எக்ஸல் கல்லுாரி 2ம் இடம் பிடித்து சாதனை
தேசிய அளவிலான கருத்தரங்கம், போட்டி எக்ஸல் கல்லுாரி 2ம் இடம் பிடித்து சாதனை
தேசிய அளவிலான கருத்தரங்கம், போட்டி எக்ஸல் கல்லுாரி 2ம் இடம் பிடித்து சாதனை
ADDED : நவ 20, 2024 01:39 AM
தேசிய அளவிலான கருத்தரங்கம், போட்டி
எக்ஸல் கல்லுாரி 2ம் இடம் பிடித்து சாதனை
குமாரபாளையம், நவ. 20-
புதுச்சேரி வெங்கடேஸ்வரா பிசியோதெரபி கல்லுாரியில், தேசிய அளவிலான பிசியோதெரபி கருத்தரங்கம் மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில், நாமக்கல், குமாரபாளையம் எக்ஸல் காலேஜ் ஆப் பிசியோதெரபி அண்ட் ரிசர்ச் சென்டர் கல்லுாரியை சேர்ந்த, 120க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
பேப்பர் பிரசன்டேஷனில் சோனா நஸ்னின், போஸ்டர் பிரசன்டேஷனில் சுரேந்தர், நந்தகுமார், 3ம் இடம்; அறிவியல் புதுமை சார்ந்த போட்டியில் மதிவாணன், உதயகவுசிக், 3ம் இடம்; முக ஓவியம் போட்டியில், சியாம், 2ம் இடம்; மைம் போட்டியில், 3ம் இடம்; பேஷன் நடையில், மேகவர்ஷினி பட்டம் வென்றனர்.
விளையாட்டு போட்டியில் பெண்கள் பிரிவில் நதி, பிரதீபா, தேவி ஸ்ரீமதி அணி முதலிடம்; ஆண்கள் பிரிவில் அருண்குமார், சுனில்தரன், பிரவின் அணி, 2ம் இடம்; கேரம் பெண்கள் பிரிவில், திவ்யதர்ஷினி, அபினா அணி, 2ம் இடம்; ஆண்கள் பிரிவில், கோகுல், சந்தோஷ் முதலிடம் பிடித்தனர். 39 கல்லுாரிகளில், எக்ஸல் கல்லுாரி ஒட்டுமொத்தம் சாம்பியன்ஷிப்பில், 2ம் இடம் பிடித்து சாதனை புரிந்தது.
மாணவர்களை, எக்ஸல் கல்வி நிறுவனங்களின் நிறுவன தலைவர் நடேசன், துணை தலைவர் மதன்கார்த்திக், தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், கல்லுாரி முதல்வர் ஐயப்பன் உள்ளிட்டோர் பாராட்டினர்.