/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பி.டி.சி., கேர் சென்டரில் முதியோருக்கு உடற்பயிற்சி
/
பி.டி.சி., கேர் சென்டரில் முதியோருக்கு உடற்பயிற்சி
பி.டி.சி., கேர் சென்டரில் முதியோருக்கு உடற்பயிற்சி
பி.டி.சி., கேர் சென்டரில் முதியோருக்கு உடற்பயிற்சி
ADDED : அக் 05, 2024 01:09 AM
பி.டி.சி., கேர் சென்டரில் முதியோருக்கு உடற்பயிற்சி
நாமக்கல், அக். 5-
நாமக்கல் மாவட்டம், தில்லைபுரத்தில் பி.டி.சி., கேர் சென்டர் அமைந்துள்ளது. இங்கு, அக்., 2ல் உலக முதியோர் தினத்தையொட்டி, சிறப்பு உடற்பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இதில் முதியோர் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய எளிமையான சிறப்பு உடற்பயிற்சிகளை, பிசியோதெரபிஸ்ட் ஜெகதீஷ் வடிவேல், ரவிகுமார் முருகேசன் தொகுத்து வழங்கினர்.
தொடர்ந்து, முதியோருக்கான சிறப்பு மருத்துவர் கவின்குமார் சரவணன், முதியோர் தவறி விழுவதால் வரக்கூடிய விளைவுகள்; அதை தடுக்க ஆலோசனை வழங்கினார். மேலும், ''வீட்டுமுறை உடற்பயிற்சி, முதியோர் சீராக நடக்க உதவும். தவறி விழுவதை தடுத்து, அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்,'' என்றார்.