/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நகர்புற உள்ளாட்சிகளில் நியமன கவுன்சிலர் பதவி மா.திறனாளிகள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ADDED : ஜூலை 27, 2025 12:45 AM
நாமக்கல் :'நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் நியமன கவுன்சிலர் பதவிகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் வரும், 31 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்தப்படி, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சிகளில், வார்டு கவுன்சிலராக நியமனம் செய்யப்படுவதற்கு, கடந்த முதல, 17 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சி, 19 டவுன் பஞ்சாயத்துககள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சிகளில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்தும், அவர்கள் தொடர்புடைய பொது நல சங்கங்களிடமிருந்தும் விண்ணப்பம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள், வரும், 31 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, டவுன் பஞ்., நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வசித்து வரும் தகுதியான மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கைகளின்படி, தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் கமிஷனர்களிடம், வரும், 31 மாலை, 3:00 மணிக்குள், தங்களின் விண்ணப்பங்களை அளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.