/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பணம் கேட்டு மிரட்டிய போலி அதிகாரி கைது
/
பணம் கேட்டு மிரட்டிய போலி அதிகாரி கைது
ADDED : ஆக 27, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்,  ராசிபுரம் அருகே, பேளுக்குறிச்சி பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் வாலிபர் ஒருவர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி  என கூறி சோதனை நடத்தியுள்ளார். அப்போது, பணம் கேட்டு மிரட்டியுள்ளர். இதனால், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொதுமக்கள், பேளுக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், பேளுக்குறிச்சி போஸ்ட் ஆபீஸ் பகுதியை சேர்ந்த செந்தில் மகன் ஜெகன், 21, என்பதும்; உணவு பாதுகாப்பு அதிகாரிபோல் நடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெகனை போலீசார் கைது செய்தனர்.

