/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் கம்பத்தில் இருந்து விழுந்த விவசாயி பலி
/
மின் கம்பத்தில் இருந்து விழுந்த விவசாயி பலி
ADDED : நவ 12, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், கொல்லிமலை, வளப்பூர் நாடு பஞ்., பெரிய கோவிலுார் பகுதியை சேர்ந்தவர் ராஜூ, 55; விவசாயம் செய்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு அருகே சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். சிவக்குமார் வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால், நேற்று முன்தினம் இரவு, அருகில் உள்ள ராஜூவை அழைத்து, மின் கம்பத்தில் ஏறி ஒயரை தட்டி விடும்படி கூறியுள்ளார்.
ராஜூவும், மின் கம்பத்தில் ஏறி ஒயரை தட்டி விட்டுள்ளார். அப்போது, கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாழவந்தி நாடு போலீசார், ராஜூவின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

