/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மருத்துவர் பணியிடத்தில் ஆட்குறைப்பு கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
/
மருத்துவர் பணியிடத்தில் ஆட்குறைப்பு கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
மருத்துவர் பணியிடத்தில் ஆட்குறைப்பு கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
மருத்துவர் பணியிடத்தில் ஆட்குறைப்பு கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:09 AM
நாமக்கல், 'மருத்துவ கல்லுாரிகளில், டாக்டர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை, தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்' என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் சக்திவேல், பொருளாளர் வனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, சங்க தலைவர் தனசேகரன் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில், 11 புதிய மருத்துவ கல்லுாரிகளிலும்; நான்கு பழைய மருத்துவ கல்லுாரிகளில் இருந்தும், ஜூனியர் ரெசிடெண்ட் பதவியில் உள்ள மருத்துவர் பணியிடங்களை ஆட்குறைப்பு செய்து, புதிதாக திறக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு பணி நிரவல் செய்து சமீபத்தில் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
புதிதாக துவக்கப்படும் மருத்துவமனைகளுக்கு மருத்துவர், செவிலியர், பிற பணியாளர்கள் பணியிடங்கள் பெரும்பாலான இடத்தில் உருவாக்கப்படவில்லை. சென்னை, கோவை, சேலம், நெல்லை, மதுரையில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், இந்த கட்டடங்களில் துறைகளை ஆரம்பிப்பதற்கு எந்த ஒரு பணியிடமும், இதுவரையில் உருவாக்காமல் உள்ளது. அதேபோல், வேலுார், துாத்துக்குடி போன்ற இடங்களில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் துவக்கப்
பட்டுள்ளன.
இங்கும், இந்த மருத்துவமனைகளை நிர்வகிப்பதற்கு எந்த ஒரு மருத்துவ பணியிடமோ, செவிலியர் பணியிடமோ, பணியாளர்கள் பணியிடமோ இதுவரை உருவாக்கவில்லை. பழைய மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் இங்கு பணி செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ
கல்லுாரிகளிலும், மருத்துவர்கள் குறைவாகவே உள்ளனர். 24,000 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 12,000 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி
வருகின்றனர்.
தற்போது, குறைவான எண்ணிக்கையில் மருத்துவர்களை வைத்து அரசு மருத்துவ கல்லுாரிகள் நடத்தி வரும் நிலையில், மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்வது தவறான செயல். தமிழக அரசு, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவர் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

