/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெங்கமேடு அரசு பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்
/
வெங்கமேடு அரசு பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்
ADDED : நவ 12, 2025 01:08 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், 2022-23, 2023-24, 2024-25ம் கல்வியாண்டுகளில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என, 12 பள்ளிகள் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில், காசோலைகளும் வழங்கப்பட்டன. அதில், ப.வேலுார் தாலுகா, கபிலர்மலை ஒன்றியம், வெங்கமேடு பஞ்., நடுநிலைப்பள்ளியும் ஒன்று.
அந்த பள்ளி தலைமையாசிரியர் மாலதியிடம், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி, 50,000 ரூபாய்க்கான காசோலை வழங்கி பாராட்டினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, டி.இ.ஓ., பச்சமுத்து, பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

