/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ்.ஐ.ஆர்.,யை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:08 AM
நாமக்கல், எஸ்.ஐ.ஆர்.,க்கு எதிராக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், நாமக்கல்-மோகனுார் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் ராஜேஸ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.பி., மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது:
தமிழகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக, பல வாக்காளர்கள் விடுபட வாய்ப்பு உள்ளது. குறைந்த கால அவகாசம் உள்ள நிலையில், பீஹாரில், 60 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். சிறுபான்மையினர், பழங்குடியினர், ஆதிதிராவிடர் நீக்கப்பட்டுள்ளனர். அதுபோன்ற நிலையை உருவாக்க தமிழகத்தில் முயற்சிக்கின்றனர். ஆனால், அது தமிழகத்தில் எடுபடாது. இந்த முறைகேடுகளை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் தடுத்து நிறுத்தும்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிக்கு, அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்து வருகிறது. கொடநாடு வழக்கை செங்கோட்டையன் கையில் எடுத்ததால், இ.பி.எஸ்., பிற காரணங்களுக்காகவும், பா.ஜ.,வை ஆதரித்துதான் ஆக வேண்டும். வரும், 2026ல் தி.மு.க., ஆட்சி மலர்வது நிச்சயம். அதற்கு அத்தாட்சி இந்த கூட்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான, காங்.,-ம.நீ.ம.,-கம்யூ.,-வி.சி., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏன ஏராளமானோர்
பங்கேற்றனர்.

