/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரத்தில் இருந்து தவறிவிழுந்த விவசாயி பலி
/
மரத்தில் இருந்து தவறிவிழுந்த விவசாயி பலி
ADDED : ஆக 31, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்:கொல்லிமலை,
வாழவந்தி நாடு, சித்துாரணிப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன், 54;
விவசாயி. அ.தி.மு.க., கிளை செயலாளராகவும் இருந்தார்.
இந்நிலையில்,
நேற்று முன்தினம் காலை, அவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறிய குணசேகரன், ஆடுகளுக்கு தேவையான இலை, தழைகளை
ஒடித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி
கீழே விழுந்துவிட்டார். அதில், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ
இடத்திலேயே குணசேகரன் இறந்தார். வாழவந்தி நாடு போலீசார் விசாரித்து
வருகின்றனர்.