ADDED : மார் 05, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார்: மோகனுார் அடுத்த ராசிபாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 63; விவசாயி. இவரது மனைவி செல்வலட்சுமி, 60; இவர், நேற்று காலை, 7:00 மணிக்கு கூலி வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து, காலை, 10:00 மணிக்கு முருகேசன், வீட்டில் உள்ள நிலத்தடி நீர் தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து விடுவதற்காக மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார்.
அப்போது, மின்சாரம் தாக்கியதில் துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்துள்ளார். மாலை, 3:00 மணிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மோகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.