/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
/
திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருமணிமுத்தாற்றில் தண்ணீர் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : அக் 11, 2024 01:09 AM
திருமணிமுத்தாற்றில் தண்ணீர்
அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
மல்லசமுத்திரம், அக். 11-
திருமணிமுத்தாற்றில், தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஏற்காடு மழையில் திருமணிமுத்தாறு உற்பத்தியாகி ஆட்டையாம்பட்டி, ஆத்துமேடு, கருங்கல்பட்டி, சோமணம்பட்டி, எலச்சிபாளையம், மாணிக்கம்பாளையம் வழியாக பரமத்தி வேலுார் அருகே, காவிரியாற்றில் இறுதியாக கலக்கிறது. தற்போது, ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பெய்த மழையால், திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால், ஆற்றோரங்களில் உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன. பல மாதங்களுக்கு விவசாயம் செய்யும் அளவிற்கு, தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.