ADDED : ஆக 13, 2025 07:15 AM
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் பி.டி.ஓ., அலுவலகம் முன், நேற்று காலை, 11:00 மணிக்கு, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். அதில், ராமாபுரம் கிராமம், கொசவம்பாளையம், பூசாரிக்காடு பகுதிகளில், 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, கடந்த, 15 நாட்களாக வேலை வழங்கவில்லை.
அவர்களுக்கு, தொடர்ச்சியாக, 100 நாள் வேலை வழங்க வேண்டும். சுழற்சி முறையில் வேலை வழங்காமல், அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். மத்திய அரசு, 100 நாள் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, 4 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசு அறிவித்த, 336 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, பி.டி.ஓ., பாலவிநாயகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.