/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்

ADDED : நவ 21, 2025 03:02 AM
நாமக்கல், வளையப்பட்டி பகுதியில் அமையவுள்ள, சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நாமக்கல்லில் விவசாயிகள் தட்டுகளை கையில் ஏந்தி, பிச்சை கேட்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் காந்தி சிலை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, விவசாய முன்னேற்ற கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். அதில், கைகளில் பாக்கு மர தட்டுகளை ஏந்தி பிச்சை கேட்டு, நுாதன முறையில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம், தமிழ்நாடு அரசின் சிப்காட் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறி பிச்சை யாசகம் கேட்டு நின்றனர்.
தொடர்ந்து, 80-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்களை தரிசு நிலங்கள் என்று திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ., விசாரணை கொண்டு வர வேண்டுமென்றும், விவசாயிகளின் விளை நிலங்கள், நீர்வடி பகுதிகள், மலைக் குன்றுகள் உள்ளிட்ட நிலங்கள் அமைந்துள்ள மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, அரூர், என். புதுப்பட்டி உள்ளிட்ட பகுதியில் தமிழ்நாடு அரசு சிப்காட் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், சிப்காட் ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவீந்திரன், நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.