/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்'
/
'வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்'
'வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்'
'வேளாண் அடுக்கம் திட்டத்தில் விவசாயிகள் பயன் பெறலாம்'
ADDED : பிப் 14, 2025 07:21 AM
சேந்தமங்கலம்: எருமப்பட்டி யூனியனில், வேளாண் அடுக்கம் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம், ஆவணங்களை கொடுத்து பயன் பெறலாம் என, வேளாண் உதவி இயக்குனர் செல்வி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் அடுக்கம் திட்டம், எருமப்பட்டி யூனியனில் வருவாய் கிராமம் வாரியாக பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தில் நிலம் விபரம், விவசாயிகள் விபரம், நில உடமை வாரியாக புவிசார் குறியீடு, பயிர் சாகுபடி விபரங்கள் உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு விவசாயிக்கும் தனி குறியீட்டு எண் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே, அவர்களின் தகவல் சேகரிக்கப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.
இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகள் தரவுத்தளத்தில் வழங்கப்படும், இதற்காக, அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண், அடிப்படையில் அவர்களின் வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் செய்யப்படும். எருமப்பட்டி விவசாயிகள், தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலுவலர்களிடம், ஆவணங்களை கொடுத்து பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.