/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் மோட்டார், ஒயர் திருடும் மர்ம நபர்கள் போலீசில் விவசாயிகள் புகார்

ADDED : மே 26, 2025 04:20 AM
நாமக்கல்: மின் மோட்டார் மற்றும் ஒயர்களை திருடி செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள் போலீசில் புகாரளித்துள்ளனர்.
நாமக்கல் யூனியன், வள்ளிபுரம் அடுத்த மணியாரம்புதுாரில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி தனசேகரன், நேற்று காலையில் தன் விவசாய தோட்டத்-திற்கு சென்று பார்த்தபோது, அங்கு தண்ணீர் இறைக்க பயன்ப-டுத்தும் மின் மோட்டார் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி-யடைந்தார். இதேபோல், அப்பகுதியில், 10-க்கும் மேற்பட்ட விவசாய கிண-றுகளில் மின் மோட்டாருக்கு செல்லும் ஒயர்களை, மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது. அதன் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய். எனவே, மின் மோட்டார், ஒயர்களை திருடி செல்லும் மர்ம நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள், நல்லிபாளையம் போலீசில் புகார் செய்துள்ளனர்.