/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நிலக்கடலை விளைச்சல் சரிவு: விவசாயிகள் கவலை
/
நிலக்கடலை விளைச்சல் சரிவு: விவசாயிகள் கவலை
ADDED : ஆக 21, 2025 02:11 AM
வெண்ணந்துார்,
வெண்ணந்துார், அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், மின்னக்கல், அத்தனுார், தேங்கல்பாளையம், ஆர்.புதுப்பாளையம், கல்லாங்குளம் சுற்றுப்பகுதிகளில் முன்பு மானாவாரியாகவும், கிணறு, ஆழ்துளை கிணறு பாசனம் மூலம் நிலக்கடலை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. மயில்களால் சேதம், போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், நிலக்கடலை சாகுபடியை பெரும்பாலான விவசாயிகள் கைவிட்டனர்.
இதனால், கடந்த சீசனில் குறைந்த பரப்பளவிலேயே நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. பயிர் வளர்ச்சி தருணத்தில், போதிய மழை இல்லாமல், அதிக வெயில் நிலவியது. இதனால், பூ விடுதல் பாதிக்கப்பட்டது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், இச்சாகுபடியில் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது அறுவடை பணி துவங்கியுள்ள நிலையில், அறுவடை நேரத்தில் மழையின் அளவு அதிகமாக இருப்பதால் ஏக்கருக்கு, 1,000 கிலோவுக்கும் குறைவாகவே நிலக்கடலை விளைந்துள்ளதால், வெண்ணந்துார் சுற்றுவட்டார விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.