/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சின்ன வெங்காயம் சாகுபடி பணியில் விவசாயிகள்
/
சின்ன வெங்காயம் சாகுபடி பணியில் விவசாயிகள்
ADDED : நவ 15, 2025 03:22 AM
வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதி-களில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. விலை வீழ்ச்சி கார-ணமாக, பெரும்பாலான விவசாயிகள் மாற்று சாகுபடிக்கு மாறி-விட்டனர்.
நாற்று பண்ணைகளில் சின்ன வெங்காயம் நாற்று வாங்கி நடவு செய்தல், விதை வாயிலாக நாற்றங்கால் அமைத்து நடவு செய்தல் மற்றும் நேரடியாக விதை வெங்காயம் நடவு செய்தல் ஆகிய முறைகளில் சாகுபடி செய்யப்படுகிறது.நேரடியாக வெங்காயம் நடவு செய்தால், 70 முதல் 90 நாட்-களில் அறுவடை செய்ய முடியும். விதை வாயிலாக சாகுபடி செய்யும் போது, 120 முதல் 130 நாட்களாகும். வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில், பரவலாக சின்னவெங்காயத்துக்கு வரும் நாட்களில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் சாகுபடிக்கு தயா-ராகி வருகின்றனர்.

