ADDED : நவ 15, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின், 137வது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, நேரு பூங்காவில் உள்ள நேருவின் சிலைக்கு கிழக்கு மாவட்ட காங்., கட்சி தலைவர் சித்திக் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மேலும் நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்து கட்சியினர் பேசினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்-டது. மாவட்ட காங்., முன்னாள் தலைவர் வீரப்பன், மாநகர தலைவர் மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

