/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மல்லசமுத்திரம் வட்டார விவசாயிகள் யூரியா தெளிக்க மானியம் பெற அழைப்பு
/
மல்லசமுத்திரம் வட்டார விவசாயிகள் யூரியா தெளிக்க மானியம் பெற அழைப்பு
மல்லசமுத்திரம் வட்டார விவசாயிகள் யூரியா தெளிக்க மானியம் பெற அழைப்பு
மல்லசமுத்திரம் வட்டார விவசாயிகள் யூரியா தெளிக்க மானியம் பெற அழைப்பு
ADDED : ஆக 05, 2025 01:26 AM
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யுவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மல்லசமுத்திரம் வட்டாரத்தில், ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன், நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலுக்கும் தீங்கு ஏற்படுத்துகிறது. ரசாயன உரங்களில், குறிப்பாக தழைச்சத்தை தரக்கூடிய யூரியாவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணில் அடியுரமாகவோ அல்லது மேலுரமாகவோ இடும்போது, 35 சதவீத சத்துக்கள் மட்டுமே பயிருக்கு கிடைக்கும்.
மீதமுள்ள, 65 சதவீத சத்துக்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடுத்துவதுடன், ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது. சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்த்தல் மற்றும் பயிருக்கு அதிகளவில் தழைச்சத்து கிடைக்க, திரவ வடிவில், 'நானோ யூரியா' வெளியிடப்பட்டுள்ளது. 2 லி., நானோ யூரியா மற்றும் தெளிப்பு கூலி ஹெக்டேருக்கு, 1,700 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விபரங்களுக்கு, பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள், மல்லசமுத்திரம் வட்டார வேளாண் விரிவாக்க மையம், வையப்பமலை துணை வேளாண் விரிவாக்கம் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

