/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மண் பரிசோதனை முகாம் நாளை துவக்கம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு: கலெக்டர்
/
மண் பரிசோதனை முகாம் நாளை துவக்கம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு: கலெக்டர்
மண் பரிசோதனை முகாம் நாளை துவக்கம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு: கலெக்டர்
மண் பரிசோதனை முகாம் நாளை துவக்கம் விவசாயிகள் பயன்பெற அழைப்பு: கலெக்டர்
ADDED : பிப் 07, 2024 12:00 PM
நாமக்கல்: 'நாளை சிறப்பு மண் பரிசோதனை முகாம் துவங்குகிறது. விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கி வரும், நடமாடும் மண் பரிசோதன நிலைய வாகனம் மூலம், கிராமங்களுக்கு நேரடியாக சென்று, விவசாயிகளிடம் இருந்து மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து, மண் வள அட்டை அன்றைய தினமே வழங்கப்பட்டு வருகிறது.
மண் பரிசோதனை வாகனம் மூலம், விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களின் மண்ணில் உள்ள கார -அமிலத்தன்மை மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துகளின் அளவு, பயிரிடப்படும் பயிர்களுக்கான உரப்பரிந்துரை மற்றும் பிரச்னைக்குரிய மண் வகைகளுக்கு, ஆய்வுக்கு ஏற்ப உரமிட்டு சாகுபடி செலவை குறைக்கலாம்.
நீர் மாதிரியின் கார- அமிலத்தன்மை, கரையும் உப்புகளின் அளவு, நேர் மற்றும் எதிர் அயனிகளின் அளவு ஆய்வு செய்யப்பட்டு, நீரின் வகைப்பாடு மற்றும் நீரின் தன்மைக்கேற்ப சாகுபடி பயிர்கள், பிரச்னைக்குரிய நீரின் மேலாண் முறைகள் தெரிவிக்கப்படும்.
இந்த வாகனம் மூலம், 2023-24ம் ஆண்டில், இதுவரை, 97 முகாம்கள் மூலம், 2,233 மண் மாதிரிகளும், 333 நீர் மாதிரிகளும் ஆய்வு செய்து, முடிவுகள் மண்வள அட்டையாக வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில், வசந்தபுரத்தில் மண்பரிசோதனை நிலையமும், திருச்செங்கோடு நாராயணபாளையத்தில் நடமாடும் மண்பரிசோதனை ஆய்வகமும் இயங்கி வருகிறது.
இம்மாதத்தில், இனிவரும் வாரங்களில், நடமாடும் மண் பரிசோதனை நிலையம் மூலம் சிறப்பு மண்பரிசோதனை முகாம் நடக்கிறது.
அதன்படி, நாளை, பரமத்தி ஒன்றியம், பிள்ளைகளத்துார், வரும், 14ல், எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம், 22ல், பள்ளிப்பாளையம் ஒன்றியம், குமாரபாளையம் அக்ரஹாரம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

